இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டில் தெற்கு ரயில்வே பல மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும், ரயில் சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னையில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு அனுமதித்துள்ளது.
புறநகர் மின்சார ரயில்: பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கடிதம்! - Edappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu
12:33 October 23
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையை தொடங்க அனுமதி வழங்கக் கோரி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அதைத்தொடர்ந்து சென்னை பொதுமக்கள், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள துணை நகரங்களுக்கு செல்ல வசதியாக புறநகர் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க செப்.2ஆம் தேதி கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் புறநகர் ரயில்களை தொடங்க அனுமதிக் கோரி கோரிக்கை வைக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்களுக்கும், பொருளாதாரத்தின் விரைவான மறுமலர்ச்சிக்கு உதவும். எனவே, இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரயில்வேக்கு வழிமுறைகளை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள துணை நகர்ப்புற ரயில்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றப்படுகின்றன என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!