தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி வாயிலாக இன்று (நவம்பர் 28) ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை படி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதன் மூலம், அவற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது என முதலமைச்சர் கூறினார்.
பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மருத்துவர் நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை - மருத்துவர் நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மருத்துவர் நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், சென்னை மெரினா கடற்கரை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தற்போது குளிர் காலம் என்பதால், அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொளி மூலம் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பொது மக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், அதை ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.