முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உலக முதியோர் தின வாழ்த்துச்செய்தியில், “முதியோரின் நலன் காக்கவும், அவர்களின் சேவைகளை அங்கீகரிக்கவும், ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் உலக முதியோர் தினமான இந்நன்நாளில், அனைத்து முதியோருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதியோருக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களை கவனமுடன் பேணிக்காப்பதை நாம் அனைவரும் தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்திட தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடவும், அவர்கள் பயனடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.