சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (10.9.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம் ) செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஜல் ஜீவன் திட்டம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் - chennai seratriat
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்-10) ஜல் ஜீவன் திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:இயக்குநர் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்