சென்னை:குரோம்பேட்டை ரேலா தனியார் மருத்துவமனையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் துரைமகாலிங்கம் உடல்நலக் குறைவால் (92) சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் (டிசம்பர் 23) சிகிச்சைப் பலனின்றி துரைமகாலிங்கம் உயிரிழந்தார். இதையடுத்து ஸ்டாலின் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்த துரைமகாலிங்கத்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.