சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பின் நேற்று (செப். 9) வீடு திரும்பினார். அவரை பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துவருகின்றனர். அதைத்தொடர்ந்து இன்று (செப். 10) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, அவரது உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து, மனோஜ் உடன் இருந்தனர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இயக்குநர் பாரதிராஜா
சென்னை நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்
முன்னதாக, மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சை பெற்றுவந்தபோது, முதலமைச்சர் பாரதிராஜாவின் மனைவியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்