சென்னை: தமிழ்நாட்டிற்குச் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஒரு கோடி கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஒரு கோடி தடுப்பூசி வழங்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - மு.க.ஸ்டாலின் கடிதம்
12:36 July 13
ஒரு கோடி கரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தமிழ்நாட்டிற்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தடுப்பூசி தேவையைப் பூர்த்திசெய்வது மிகவும் கடினமாக உள்ளது.
தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும், தமிழ்நாட்டிற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைத்திடவும், ஒரு கோடி தடுப்பூசிகளைச் சிறப்பு ஒதுக்கீடாக அளித்திட வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்