தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளைத் திறந்துவைத்த முதலமைச்சர்! - தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின்

378 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) திறந்து வைத்தார்.

Etv Bharatகாவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின்  திறந்து வைத்தார்
Etv Bharatகாவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By

Published : Aug 8, 2022, 5:16 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.8.2022) சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் 186 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்.

மேலும், உள்துறை சார்பில் 36 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 32 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான பாசறை, 55 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அதனைத்தொடர்ந்து, சென்னை, புதுப்பேட்டைக்குச்சென்று, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் 100 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையான 3 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன், வழங்கினார்.

இதையும் படிங்க:புதிய காவலர் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details