விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொழுவாரி ஊராட்சியில் ரூ. 2.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை இன்று (ஏப். 5) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 24 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 38 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு 42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், "தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே சமத்துவபுரமாக மாறவேண்டும். இதுதான் திராவிட மாடல். தமிழ்நாடு முழுவதும் 238 சமத்துவ புரங்கள் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் புதுப்பொலிவுடன் தொடங்கப்படும்.