தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவருமான, ஞானதேசிகன்(71) கடந்த ஜனவரி 15 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நெஞ்சுவலி காரணமாக, கடந்த நவம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானதேசிகன், பின்னர் கரோனா பாதித்து நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வீடு திரும்பிய நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
மறைந்த ஞானதேசிகனுக்கு முதலமைச்சர் மலரஞ்சலி! - மறைந்த ஞானதேசிகன் படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
சென்னை: மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
condolences
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று, மறைந்த ஞானதேசிகனின் இல்லத்துக்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தாரிடம் அவர் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:பிரதமரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி