கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு சார்பாக மத்தியக் குழு கூடுதல் செயலர் திருப்புகழ் தலைமையில் ஐந்து பேர் சென்னை வந்தனர். இரண்டு நாட்களாக சென்னை மாநகராட்சி, கோயம்பேடு மார்க்கெட், அம்மா உணவகங்கள், எழிலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்தியக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை...! - மத்தியக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை வந்துள்ள மத்தியக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக் குழுவினர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் திருப்புகழ் தலைமையிலான மத்தியக் குழுவினர் டாக்டர் அனிதா கோகர், டாக்டர் சூரிய பிரகாஷ், லோகேந்தர் சிங், டாக்டர் வி. விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.
TAGGED:
Central group meet cm