இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி பாசனபரப்பில் அமைந்துள்ள கோடைமேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் அணைக்கட்டுகளின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு! - தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை: பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Chief Minister orders to open water from Papanasam and Chervalaru dams!
இதையடுத்து விவசாயிகளிடமிருந்து வந்த வேண்டுகோளை ஏற்று, வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு, பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து 691 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் பாசனம், கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.