இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார் கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு தண்ணீர் வழங்க உழவர்கள் கோரியிருந்தனர். அதனை ஏற்று, கடனா, அடவிநயினார், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு 26.11.2020 முதல் 30.3.2021 வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.
கடனா, அடவிநயினார், இராமநதி, கருப்பாநதி தேக்கங்களில் நீர் திறக்க ஆணை! - கருப்பா நதி
சென்னை: கடனா, அடவிநயினார், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
open
இதனால், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மாதேவி வட்டங்கள் ஆகியவற்றில் உள்ள 32,024.58 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆபத்தை உணராமல் பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கும் சிறார்கள்!