இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு 7.6.2020 முதல் 31.10.2020 முடிய 146 நாட்களுக்கு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தை பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து 1,156 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.