இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் முகாமிலே தங்கியிருக்க முதலமைச்சர் வேண்டுகோள்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாமிலேயே இருக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரை 9 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 சிறப்பு ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களையும் தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலுடன், ரயில்கள் மூலம் ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அதுவரை வெளி மாநிலத் தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து மணிப்பூர், ஆந்திராவிற்கு சிறப்பு ரயில்கள்