தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாள்தோறும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவோ, பிற வாகனத்திலோ தன்னிசையாக செல்ல வேண்டாமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

cm
cm

By

Published : May 16, 2020, 5:04 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

இதுவரை (6.5.2020 முதல் 15.5.2020 வரை) 55,473 வெளி மாநில தொழிலாளர்கள் 43 ரயில்களில் பிகார், ஒடிசா, ஜார்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தினம்தோறும் சுமார் 10,000 வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து வெளி மாநிலத் தொழிலாளர்களும் தங்களது விருப்பத்தின் பேரில் அவரவர் மாநிலங்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம். அதுவரை, வெளி மாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசம் செல்ல முயன்ற 40 தொழிலாளர்கள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details