தலைமைச் செயலகத்தில் இன்று எரிசக்தித்துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் 21 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், 278 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளியில் 5 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைமை பொறியாளர் அலுவலகக் கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
18 துணை மின் நிலையங்கள்! - முதலமைச்சர் திறந்து வைப்பு!
சென்னை: 299 கோடியே 96 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
function
இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கஃபீல், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 2.72 கோடி மதிப்பீட்டிலான கட்டடங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர்