இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6,000 மி.க.அடி தண்ணீர் இருந்தால், பெரியாறு பாசனப்பகுதியில், ஒருபோக பாசன நிலங்களும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களும் வசதி பெறும்.
எனவே, பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி வேளாண் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதனை ஏற்று, வைகை அணையிலிருந்து 27.9.2020 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.