தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமராவதி அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு! - அமராவதி அணை

சென்னை: விவசாயப் பணிகளுக்காக அமராவதி அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

dam
dam

By

Published : Aug 5, 2020, 6:46 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள உழவர்கள், அமராவதி அணையிலிருந்து, குடிநீர் மற்றும் பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக கரூர் நகரம் வரை குடிநீர் தேவை மற்றும் 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு 06.08.2020 முதல் 16.08.2020 வரை 11 நாட்களுக்கு 1210 மி.க. அடி தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், அமராவதி பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, 06.08.2020 முதல் 20.08.2020 வரை 15 நாட்களுக்கு, 570 மி.க. அடி தண்ணீர் என மொத்தம் 1780 மி.க. அடி தண்ணீரை திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details