தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்குப் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று 2020 ஜூன் 8ஆம் தேதிமுதல் 2021 பிப்ரவரி 28ஆம் தேதிவரை நாள் ஒன்றுக்கு 850 கனஅடி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீரை திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.