தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் - தமிழ்நாடு அரசு - சலூன்

சென்னை: முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூ.2,000 ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

assembly
assembly

By

Published : May 16, 2020, 8:42 PM IST

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித் தொகை உள்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 14,667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் முடி திருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்காததால், நலவாரியத்தில் பதிவு செய்யாத நபர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு அரசு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து, முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள், கிராமப் புறங்களில் கிராம நிர்வாக அலுவலர்களிடமும், பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் இருக்கும் இடத்தின் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும். அம்மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் அம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இரண்டு தவணையாக ரூ.2,000 ரொக்கமாக வழங்கியது போன்று, நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூ.2,000 ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாள்தோறும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details