ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் ஹண்டேவிற்கு முதலமைச்சர் நன்றி - எச்.வி.ஹண்டே

சென்னை: முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டேவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

palanisami
palanisami
author img

By

Published : Jul 22, 2020, 2:53 PM IST

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த எச்.வி. ஹண்டே எழுதிய வாழ்த்து கடிதத்திற்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “ ஊக்கத்தைத் தவிர வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு இணங்கவும், லட்சியத்தில் உறுதி என்ற குறிக்கோளுடனும், தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, குறுகிய காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை அமைத்ததற்காக என்னைப் பாராட்டி தாங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் எனக்கு மேலும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளன.

மூத்த அரசியல்வாதியும், எம்ஜிஆர் இதயத்தில் இருந்தவருமான, தாங்கள் என்னை பாராட்டி, வாழ்த்தியமைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவேண்டும் என வேண்டுகிறேன் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்துக்கொள்ளலாம் - அமைச்சர் நிலோபர் கபில்

ABOUT THE AUTHOR

...view details