தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், சென்னை பெருங்குடியிலுள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில், 74 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் இரண்டாவது அதிநவீன மாநில தரவு மையத்தை, காணொலி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
195 அடுக்குகளைக் கொண்ட இத்தரவு மையம், அரசுத்துறைகளுக்கிடையேயும், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலும் மற்றும் அரசுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையிலும், இணையதள சேவைகளை வழங்குவதற்கும், அரசுத் துறைகளின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை நிறைவு செய்யவும் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டிற்கான சைபர் பாதுகாப்பு கட்டமைப்புத் திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக ’CERT-TN (Computer Emergency Response Team) https://cert.tn.gov.in’ என்ற இணையதளத்தையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். அனைத்து அரசு துறைகளின் கணினி கட்டமைப்புகளைத் தணிக்கை செய்தல், பாதுகாத்தல், கண்காணித்தல் ஆகிய பணிகளில் CERT-TN முக்கியப் பங்கு வகிக்கும். இதன்மூலம் தடையற்ற இணையவழி சேவைகள், அரசுத் துறை தரவுகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
’இதன்மூலம் அரசுத்துறை தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரங்கராஜன் குழு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிப்பு!