சென்னை:தமிழ்நாட்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்ற அரசாணையை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நாளை(செப்.30) முடிவடைவதையொட்டி தலைமைச் செயலகத்தில் இன்று(செப்.29) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், “ தமிழ்நாட்டில்தான் அதிகளவிலான, அதாவது 182 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 71 லட்சம் பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.