தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்’ - முதலமைச்சர் ’மே தின’ வாழ்த்து! - மே தினம்

சென்னை: கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் ’மே தின’ நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

wishes
wishes

By

Published : Apr 30, 2020, 12:14 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள

’மே தின’ வாழ்த்துச் செய்தியில், ” உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் கால நேரமில்லாமல் பணி செய்து, கொத்தடிமைகளாய் அவதியுற்று இருந்த உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர், பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் மக்களின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றும் தினமாகவும் மே தினம் விளங்குகிறது.

’மகத்தான செயல் எதுவும் கடின உழைப்பு இல்லாமல் சாதிக்க முடிவதில்லை’ என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி, மக்கள் அனைவரும் தொய்வின்றி கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.

உழைப்பே உயர்வு தரும், ஒளிமயமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் அன்பிற்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ’மே தின’ நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக ஆளுநர் மே தின வாழ்த்து செய்தி

ABOUT THE AUTHOR

...view details