தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

By

Published : Apr 16, 2020, 12:20 PM IST

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, தொடரவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

MEET
MEET

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதையொட்டி நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதில், கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கில் சிறு தளர்வு செய்வது, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக்குவது போன்றவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details