தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாம்பு கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், அத்துயர நிகழ்வுகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பாம்பு கடித்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த 27 பேர் - முதலமைச்சர் இரங்கல் - எடப்பாடி பழனிசாமி
சென்னை: பாம்பு கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 27 நபர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மனைவி பானுமதி, வலங்கைமான் வட்டம், புலவர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் பிரதீப், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜம்புகுட்டப்பட்டி தரப்பு சத்தியராஜ் என்பவரின் மகன் சிறுவன் அஜய் ஆகியோர் பாம்பு கடித்தும், மானூர் வட்டம், தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மஞ்சுநாதன் மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் உள்ளிட்ட 27 பேர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘சொந்த காசில் சூனியம் வைக்கும் தேமுதிக’ - சுதீஸ் பதிவுக்கு செந்தில் குமார் எம்பி காட்டம்!