இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ரஷ்ய நாட்டில் உள்ள வால்கோகிராட் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகிய நான்கு மாணவர்களும் 8.8.2020 அன்று அங்குள்ள வோல்கா ஆற்றில் குளித்தபோது, எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கி உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழ்நாட்டு மாணவர்கள் - முதலமைச்சர் இரங்கல் - ரஷ்யா
சென்னை: ரஷ்ய நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்பாராத மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இத்துயர நிகழ்வில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இச்செய்தி குறித்து அறிந்தவுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி', முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!