தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சரை 'பெருந்தலைவர் காமராஜராக' நினைக்கிறேன் - பேரவையில் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் புகழாரம் - முதலமைச்சரை பெருந்தலைவர் காமராஜராக நினைக்கிறேன்

தமிழ்நாடு முதலமைச்சரை 'பெருந்தலைவர் காமராஜராக நினைக்கிறேன்' என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் சட்டப்பேரவையில் புகழ்ந்துள்ளார்.

முதலமைச்சரை  பெருந்தலைவர் காமராஜராக நினைக்கிறேன்
முதலமைச்சரை பெருந்தலைவர் காமராஜராக நினைக்கிறேன்

By

Published : Apr 22, 2022, 7:57 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம், "தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு நீர்தேக்கத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் 1,30,000 ஏக்கர் பயனடையும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சரை பெருந்தலைவர் காமராஜராக நினைக்கிறேன்" எனவும் கூறினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”தோனிமடுவு நீர்தேக்கத்திட்டம் குறித்து அரசால், ஆய்வு செய்யப்பட்டு தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சாதகமற்ற சூழல் இருப்பதால் இந்த திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாகவும், தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனவும் தெரிவித்து பதிலளித்தார்.

இதையும் படிங்க:'நான் உனை நீங்கமாட்டேன்..!' - ட்விட்டரில் இளையராஜா யாரைக் குறிப்பிட்டார்?

ABOUT THE AUTHOR

...view details