தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து செல்ல அனுமதி வேண்டி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் ! - சென்னை விமானநிலையம்

தமிழ்நாடு ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து செல்ல அனுமதி வழங்கவேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Chief Minister of Tamil Nadu
Chief Minister of Tamil Nadu

By

Published : Nov 17, 2020, 8:03 AM IST

சென்னை: தமிழ்நாடு ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து 4500க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள், சவுதி அரேபியாவிற்கு ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் இருந்து செல்கின்றனர். சென்னையிலிருந்து ஜெட்டாவிற்கு, 1987 ஆம் ஆண்டிலிருந்து, இருந்து நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன.

இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற பகுதிகளிலிருந்து பயணிக்கும் யாத்ரீகர்களுக்கு பயனாக இருந்த்தது. இந்திய ஹஜ் கமிட்டி தற்போது கரோனா தொற்றுநோய் சூழல் காரணமாக இந்தியாவில் எம்பர்கேஷன் புள்ளிகளின் எண்ணிக்கை ஹஜ் - 2021 க்கு 21 முதல் 10 ஆக குறைக்கப்பட்டு அறிவித்துள்ளது. இதில் சென்னை பட்டியல் விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் கொச்சின் செல்ல நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவாலாக இருக்கும், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பயணிக்க பெரும்பாலும் மூத்த குடிமக்களான யாத்ரீகர்கள் விமானத்தில் ஏறி கொச்சினுக்கு செல்லவது குறித்த கஷ்டங்கள் மற்றும் சிரமங்களைப் பற்றி என்னிடம் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கொச்சினிலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும்போது யாத்ரீகர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், சிரமங்களையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் தமிழ்நாட்டிலிருந்து, முந்தைய ஆண்டுகளைப் போலவே ஹஜ் 2021 க்கான எம்பர்கேஷன் பாயிண்ட், சென்னை என நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை எம்பர்கேஷன் பாயிண்ட் யாத்ரீகர்களை அனுப்பும் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நெறிமுறைகள், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசால் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகாரின் முதல் பெண் துணை முதலமைச்சர் ரேணு தேவி!

ABOUT THE AUTHOR

...view details