தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலம் ஆக வேண்டும் - ஸ்டாலின் - The State Development Policy Committee

'தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக வேண்டும், மாநிலத்தில் பின்தங்கிய மாவட்டம் என்று எதுவும் இருக்கக் கூடாது' என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலம் ஆக வேண்டும் - ஸ்டாலின்
தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலம் ஆக வேண்டும் - ஸ்டாலின்

By

Published : Jul 2, 2021, 6:58 PM IST

Updated : Jul 2, 2021, 7:05 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், "தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாற வேண்டும்.

பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக் கூடாது என்ற வகையில் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத, நிலையான வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை" என்று நம்பிக்கையூட்டும் யோசனையை முன்வைத்தார்.

அமர்த்தியா சென்

  • மேலும், 'பொருளாதார வளர்ச்சியும், சமூக நலத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைக்கொடுத்துச் செயல்பட்டதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது'

என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்துப் பாராட்டியுள்ளதையும் தனது உரையின்போது மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலம் ஆக வேண்டும் - ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சி

"தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி-இறக்குமதி, நிதி மூலதனம் மட்டுமல்ல; அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும்" என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியினைக் காட்ட வேண்டுமென்றும் கூட்டத்தில் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக இக்கூட்டத்தில் வரவேற்றுப் பேசிய மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தக் கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சர்வதேச தரம் நோக்கி சுகாதாரம்... ஸ்டாலின் வகுக்கும் வியூகம்: கூட்டிக் கழிச்சுப் பாரு சரியா வரும்!

Last Updated : Jul 2, 2021, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details