சென்னை: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலை இங்கிலாந்தில் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொள்ள வேண்டும் என பென்னிகுவிக் ஆராய்ச்சியாளர் சந்தான பீர்ஒளி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் புதிய சிலையை இங்கிலாந்தில் உள்ள அவர் பிறந்த ஊரான கேம்பர்ளி உள்ள மைய பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.