தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளான இன்று(செப் 15) அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Sep 15, 2021, 10:53 AM IST

Updated : Sep 15, 2021, 12:41 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அவரது முழுவுருவச் சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சரை தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சென்னைப் பகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் முதலமைச்சருடன் வருகை தந்தனர்.

இதையும் படிங்க: ரிதம் - தமிழின் ஃபீல் குட் கவிதை

Last Updated : Sep 15, 2021, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details