சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலராக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததாகவும், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரியும், சென்னையை சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் என்று கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சேகர்ராம் போலி பத்திரிக்கையாளர் என்று பொன். மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனைகேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சிலை மூன்று மாதங்களில் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.