தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் கரோனா நிதி வழங்கினார்
12:25 May 17
கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்
இதனையடுத்து கரோனா பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினி காந்த் இன்று சந்தித்தார். அப்போது கரோனா நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயை அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கரோனா ஒழிக்க தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்' என கூறினார்.