தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஐந்து ஆளுமைகளுக்கான மணிமண்டபங்கள்: முதலமைச்சர் அடிக்கல்! - எடப்பாடி பழனிசாமி

சென்னை: பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட ஐந்து பேருக்கான மணிமண்டபங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

function
function

By

Published : Jun 16, 2020, 1:32 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கோ. அபிஷேகபுரத்தில் ஒரு கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரது முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபங்களுக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கிராமத்தில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு 92 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரியாற்றின் இடக்கரையில் அல்லாள இளைய நாயகர் அவர்களுக்கு 21 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முழு திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட மண்டபத்திற்கும் முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். வளர்மதி, தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா பரவலுக்கு ஒன்றிணைவோம் வா திட்டம் தான் காரணம் - ராஜேந்திர பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details