தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2020, 3:36 PM IST

Updated : Jun 5, 2020, 4:43 PM IST

ETV Bharat / city

’ஒளிரும் தமிழ்நாடு மாநாடு’ - முதலமைச்சர் நாளை தொடங்கிவைக்கிறார்!

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ’ஒளிரும் தமிழ்நாடு’ என்ற காணொலி மாநாட்டினை நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.

palanisami
palanisami

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாளை, (6.6.2020), காலை 11 மணிக்கு அளவில், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெறும், ’ஒளிரும் தமிழ்நாடு’ என்ற காணொலி மாநாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுவார்.

அதோடு, தமிழ்நாட்டின் தொழில் வளம் பற்றிய கையேட்டினை முதலமைச்சர் வெளியிடுவார். இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், மாநாட்டில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி K. தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் தினேஷ், சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழும துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழும துணைத்தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவன மேலாண் இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவன மேலாண் இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆழியாறு அணையை திறக்க முதலமைச்சர் ஆணை!

Last Updated : Jun 5, 2020, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details