தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முப்பரிமாண தோற்றத்தில் கைவினை பொருள்கள் விற்பனை - பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம்

சென்னை: பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மற்றும் மெய்தோற்ற கைப்பேசி செயலி ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.

function
function

By

Published : Oct 6, 2020, 2:26 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் (Poompuhar Virtual Reality Show room) மற்றும் மெய்தோற்ற கைப்பேசி செயலி (Augmented Reality Mobile App) ஆகியவற்றை துவக்கி வைத்தார்.

இந்த மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மூலம், தமிழ்நாடு கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பொருள்களை வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலிருந்தும் முப்பரிமாண முறையில் பார்த்து, இணையதள வழியாக வாங்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மெய்தோற்ற கைப்பேசி செயலி மூலம், கைவினைப் பொருள்களை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தி கைவினைப் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரகத்தொழில்துறை அமைச்சர் பெஞ்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ’பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details