தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணை அடிப்படையில் 30 பேருக்கு பணி நியமனம் - முதலமைச்சர் வழங்கல்! - எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்துவைத்ததோடு, கருணை அடிப்படையில் 30 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

function
function

By

Published : Jun 9, 2020, 12:19 PM IST

முதலமைச்சர் பழனிசாமி தலைமைச்செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 71 கோடியே ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 15 சேமிப்புக் கிடங்குகளைத் திறந்துவைத்தார்.

மேலும், மதுரையில் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகக் கட்டடத்தையும் அவர் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 30 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர், தூய்மைப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் பழனிசாமி, 4 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

கருணை அடிப்படையில் 30 பேருக்கு பணி நியமனம் - முதலமைச்சர் வழங்கினார்!

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நோயால் பாதிக்கப்படலாம் என கணக்கிட் பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு

ABOUT THE AUTHOR

...view details