தலைமைச் செயலகத்தில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம், திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், திருவாரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 8 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 பாலங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ரூ.17.14 கோடி மதிப்பிலான கட்டடங்கள், பாலங்கள் திறப்பு! - புதிய கட்டடங்கள், பாலங்கள் திறப்பு
சென்னை: 17.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம், 5 பாலங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
function
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபீல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மழைநீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்