தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதலமைச்சர் அடிக்கல்

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

function
function

By

Published : May 28, 2020, 4:42 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார். அதன்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் வன்னியம்பட்டியில் வெள்ளாற்றின் குறுக்கே 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை அவர் திறந்து வைத்தார்.

மேலும், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி, திருவாரூர், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 29 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள் மற்றும் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்த அவர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் 70 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஆற்றுப்பாலம் மற்றும் 3 சாலை மேம்பால பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைப்பு!

இதையடுத்து, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில், 36 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி, தஞ்சாவூர், அரியலூர், சென்னை, ஈரோடு மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 1314 மனை மேம்பாட்டுத் திட்டத்தையும் திறந்து வைத்தார். இதன் மொத்த மதிப்பு ரூ. 299 கோடியே 28 லட்சமாகும்.

இதன் பின்னர், நீர்வள ஆதாரத் துறை சார்பில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்று திட்டத்தின் கீழ் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், பொதுப்பணித்துறை சார்பில் 16 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 17 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்!

இதையும் படிங்க: காய்கறி, பழங்களை பதப்படுத்த 'உணவு சங்கிலி மேலாண்மை' திட்டம்

ABOUT THE AUTHOR

...view details