கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுமார் 60 நாட்களுக்கு பின்னர் தொழிற்சாலைகள் 30 விழுக்காடு பணியாட்கள் கொண்டு தகுந்த பாதுகாப்போடு இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இத்தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் இயக்கங்கள், பாதுகாப்பு முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு! - சிறு,குறு நிறுவனங்கள்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
meet
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தீர்ப்பின் நகல் வெளியான பிறகு தான் முடிவு எடுக்கப்படும்: பில்ராத் நிர்வாகம்