தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இங்கிலாந்தில் இருந்து பரவக்கூடிய உருமாறிய கரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வரவிருக்கும் விழாக்காலங்களில் திரையரங்குகளுக்கு செல்ல 100% அனுமதி, பள்ளி கல்லூரிகள் திறப்பு ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர் குழு உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, வளர்ந்த நாடுகளில் தற்போது போடப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகள், தமிழகத்தில் போடப்படும்போது புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய் பாதித்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும் முன்னிரிமை வழங்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்து.