சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப்போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல் துறையைச்சேர்ந்த 13 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப்போட்டி நெதர்லாந்து நாட்டின் 'ரோட்டர்டேம்' நகரில் கடந்த ஜூலை 22 முதல் 31 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் எ. மயில்வாகனன் தலைமையில் 3 ஆய்வாளர்கள், 1 உதவி ஆய்வாளர், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 3 தலைமைக்காவலர்கள் மற்றும் 3 பெண் தலைமைக்காவலர்கள், என மொத்தம் 13 பேர் பல்வேறு போட்டிப்பிரிவுகளில் பங்கேற்றனர்.