இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:
- வாலாசா வட்டம் கொண்டகுப்பம் மதுரா குமணந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா என்பவரின் கணவர் பெரியசாமி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்,
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் வள்ளுவர் மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி பரிமளா என்பவர் பணி முடிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்,
- கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டம் சிங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் ரத்தினசாமி என்பவர் நீரேற்றும் பம்பில் அடைப்பினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்
என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மேற்கண்ட பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.