இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி என்பவர் ஜூலை 31 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்தவுடனே அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.
ஹவில்தார் திருமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் - இந்திய ராணுவம்
சென்னை: இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூரைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
![ஹவில்தார் திருமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் Chief Minister condoles](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:35:06:1597842306-tn-che-06-cmcondolences-7209106-19082020181424-1908f-1597841064-527.jpeg)
Chief Minister condoles
திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். மேலும், உயிரிழந்த ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்ப நிலையினை கருத்திற்கொண்டு, அன்னாரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் தற்போது உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.