சென்னை அருகே ஆவடியில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமை அலுவலர் அபே ஜெரி கலந்து கொண்டு 22 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களையும் 522 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். சிறப்புரை ஆற்றிய அவர், 5 1/2 வயது சிறுவன் புதிய கண்டுபிடிப்புக்கான ஜனாதிபதி விருது பெற்றுள்ளான் எனவே தற்போதுள்ள சூழலில் சாதனைகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வயது தடையாக இருப்பதில்லை, ஆக்கமும் முயற்சியுமே முக்கிய பங்காற்றுகிறது என தெரிவித்தார்.
மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அரசு ஆதரவாக இருக்கும் - அபே ஜெரி - VELS COLLEGE 15TH GRADUATION DAY
சென்னை: மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், முயற்சிக்கும் அரசு ஆதரவாக இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமை அலுவலர் அபெ ஜெரி தெரிவித்துள்ளார்.
அபே ஜெரி
இந்தியாவில் ஒருபுறம் ஆயிரக்கணக்கான பிரச்னைகள் உள்ளன மறுபுறம் உங்களைபோன்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் நீங்கள் அவற்றிற்கு தகுந்த தீர்வை தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என ஆலோசனை கூறினார். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், முயற்சிக்கும் அரசு ஆதரவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.