தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் - வாக்காளர் பட்டியல்

சென்னை: தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

officer
officer

By

Published : Sep 10, 2020, 7:50 PM IST

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதையடுத்து நவம்பர் மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அன்றிலிருந்து டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை, பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை வாக்காளர்கள் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2021ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியை மாற்றி, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 2021 ஜனவரி 20ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details