தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செஸ் ஒலிம்பியாட் : இந்திய வீரர்கள் குகேஷ், நிஹல் சரின் தங்கம் வென்றனர் - இந்திய ஏ அணிகளுக்கு நானோ கப்ரிந்தஷ்விலி கோப்பை

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிஹல் சரின் தங்கம் வென்றனர். ஓப்பன் மற்றும் பெண்கள் பிரிவில் சிறப்பாக விளையாடிய இந்திய ஏ அணிகளுக்கு "நானோ கப்ரிந்தஷ்விலி" கோப்பை வழங்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 9, 2022, 9:07 PM IST

சென்னை:44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 186 நாடுகளில் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 30 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 11 சுற்றுகளின் முடிவில் பதக்கம் வென்ற அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஓப்பன் பிரிவில், உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. அர்மேனியா அணி 19 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்தியா பி அணி 18 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. பெண்கள் பிரிவில், உக்ரைன் அணி 18 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. ஜார்ஜியா அணி 18 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்தியா ஏ அணி 17 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

44வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட 186 அணிகளிலும் ஒரு அணிக்கு ஐவர் என ஐந்து போர்டுகளில் விளையாடினார்கள். இதில் ஒவ்வொரு போர்டிலும் சிறப்பாக விளையாடிய 186 வீரர்களில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் இந்தியாவுக்காக விளையாடி பதக்கங்கள் வென்ற வீரர்களின் விபரங்களைப் பார்க்கலாம்...

  • இந்தியாவின் ஓப்பன் பி அணியை சேர்ந்த குகேஷ், முதல் நிலை போர்டில் விளையாடிய 2,867 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.
  • இந்தியாவின் ஓப்பன் பி அணியை சேர்ந்த நிஹல் சரின், இரண்டாம் நிலை போர்டில் விளையாடி 2,774 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.
  • இந்தியாவின் ஓப்பன் ஏ அணியைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசி மூன்றாம் நிலை போர்டில் விளையாடி 2,767 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இந்தியாவின் ஓப்பன் பி அணியை சேர்ந்த பிரக்யானந்தா, மூன்றாம் நிலை போர்டில் விளையாடிய 2,767 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இந்தியாவின் பெண்கள் ஏ அணியை சேர்ந்த வைஷாலி, மூன்றாம் நிலை போர்டில் விளையாடி 2,452 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இந்தியாவின் பெண்கள் ஏ அணியை சேர்ந்த தானியா சச்தேவ், நான்காம் நிலை போர்டில் விளையாடி 2,441 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இந்தியாவின் பெண்கள் பி அணியை சேர்ந்த திவ்யா தேஷ்முக், ஐந்தாம் நிலை போர்டில் விளையாடி 2,298 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒவ்வொரு ஒலிம்பியாடிலும் ஓப்பன் மற்றும் பெண்கள் பிரிவில் சிறப்பாக விளையாடிய அணிகளின் கூட்டமைப்புக்கு வழங்கப்படும் "நானோ கப்ரிந்தஷ்விலி" கோப்பை இந்திய ஏ அணிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:'செஸ்-க்காக வந்தேன்... சேலை வாங்கிச் செல்கிறேன்': கென்யா பயிற்சியாளர்

ABOUT THE AUTHOR

...view details