தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா!! - செஸ் ஒலிம்பியாட்

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா தனது குடும்பத்தினருடன் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சூப்பர்ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா!!
சூப்பர்ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா!!

By

Published : Jul 23, 2022, 3:27 PM IST

Updated : Jul 23, 2022, 4:03 PM IST

சென்னை: ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரக்ஞானந்தா பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் பிரக்ஞானந்தா தனது குடும்பத்தினருடன் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரக்ஞானந்தாவை வாழ்த்திய ரஜினிகாந்த் அவருக்கு அன்பளிப்பாக செஸ் போர்டும் ராகவேந்திரா புகைப்படமும் வழங்கினார்.

பிரக்ஞானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, ”மறக்க முடியாத நாள், இன்று ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். இவ்வளவு உயரங்கள் சென்றும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் தொடரில் பிரக்ஞானந்தா உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை' - ஆன்மீக நிகழ்வில் ரஜினிகாந்த் பேச்சு

Last Updated : Jul 23, 2022, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details